சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து.. ஓட்டுநர் பரிதாப பலி.!

 
ராமன்

நாட்றம்பள்ளி அருகே சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது  பின்னால் வந்த கண்டைனர் லாரி மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

ஊட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் தினேஷ் வயது (44) இவர் குஜராத் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

அப்போது நெய்வேலி பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் ராமன் வயது (60) இவர் கண்டெய்னர் லாரியில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார் .அப்போது ஆத்தூர் குப்பம் பகுதியில் சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்து மோதியுள்ளார்.இதன் காரணமாக கண்டைனர் லாரி ஓட்டுநர் ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு நாட்றம்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நாட்றம்பள்ளி போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது பின்னால் வந்த லாரி மோதி ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web