இறப்பிலும் இணைபிரியாத தம்பதி... கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் மரணம் !

 
கருப்பாத்தாள்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவராக கடந்த 30 ஆண்டுகளாக பொறுப்பு வகித்தவர் பழனிசாமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது சகோதரரும், சோமனூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான குருசாமி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் பழனிச்சாமியும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கருப்பாத்தாள்

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்ததும் மிகுந்த துக்கத்தில் இருந்த அவரது மனைவி கருப்பாத்தாள், உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, கணவர் அனுமதிக்கப்பட்ட கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் காலை 9.30 மணிக்கு பலியானார்.

இருவரது உடல்களும் சோமனூர் செந்தில்நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை மாவட்ட விசைத்தறியாளர் சங்கத்தினர் ஒருநாள் விசைத்தறிகளை இயக்காமல் நிறுத்தி வைத்தனர்.

கருப்பாத்தாள்

பழனிச்சாமி விசைத்தறி தொழிலாளர்களுக்காக அவரது வாழ்வில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவர். குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்களுக்கான இலவச மின்சாரத்திற்காக பல முறை பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்தவர். மேலும் கூலி உயர்வு, மின் கட்டண குறைப்பு உள்ளிட்ட விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். 

From around the web