மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. கணவர் இறந்த செய்தி கேட்டதும் உயிரை விட்ட மனைவி!

 
முத்தையன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் என்கிற முத்தையன் (78). இவரது மனைவி குப்பாயி (70). இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர். திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் முத்தையனும், குப்பாயியும் தனி வீட்டில் வசித்து வந்தனர். மிகுந்த அன்புடன் வாழ்ந்து வந்தார்கள்.

வயது மூப்பு காரணமாக இருவரும் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், குப்பாயிக்கு காதுகேளாமை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திடீரென முத்தையா உயிரிழந்தார். ஆனால் குப்பாயிக்கு இது பற்றி தெரியாது. இருப்பினும் முத்தயன் இறந்த தகவல் அறிந்த உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனர்.

மேளம் அடிப்பதையும், உறவினர்கள் கதறி அழுததையும் பார்த்து சந்தேகமடைந்த குப்பாயி அருகில் இருந்தவர்களிடம் விவரம் கேட்டுள்ளார். அப்போது முத்தையனின் மரணம் குறித்து அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குப்பாயி, கணவர் இறந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.

அப்போது முத்தையன் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் அருகே குப்பாயி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உறவினர்கள் அருகில் சென்று பார்த்தபோது, குப்பாயி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. வாழ்நாள் முழுவதும் அன்புடன் வாழ்ந்த தம்பதிகள் மரணத்திலும் இணையாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web