சூப்பர்... வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி மாளிகையில் சிபிஎப் அதிகாரிக்கு திருமணம்!

 
பூனம் குப்தா


இந்தியாவில் சமீபத்தில் பிரதமர்  மோடிக்கு பெண் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு வழங்கி வரும் புகைப்படம் ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலித்தது. இதுகுறித்து  முன்னணி ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்தது சிஆர்பிஎப் படையை சேர்ந்த பெண் அதிகாரி பூனம் குப்தா என்று விளக்கம் அளித்தன. இவர் பிரதமருக்கான பாதுகாப்பு படையில் இல்லை. குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படையில் இருக்கிறார் என ஊடகங்கள் தகவல்களை உறுதி செய்தன.  

பூனம் குப்தா
அப்போது முதல் சிஆர்பிஎப் துணை கமாண்டர் பூனம் குப்தா இந்தியா முழுவதும் முக்கிய பிரபலமாகி விட்டார். இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில்  சிவபுரியில் வசித்து வருகிறார். இவருக்கும் காஷ்மீரில் சிஆர்பிஎப் துணை கமாண்டராக பணியாற்றும் அவினாஷ் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
பூனம் குப்தாவின் திருமணம் குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்கு சமீபத்தில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையின் அன்னை தெரசா வளாகத்தில் திருமணத்தை நடத்த அவர் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

பூனம் குப்தா
இதன்படி  பிப்ரவரி 12ம் தேதி பூனம் குப்தா, அவினாஷ் குமாரின் திருமணம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக அரசு அதிகாரி ஒருவரின் திருமணம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பூனம் குப்தாவின் நெருங்கிய உறவினர் சோனு  மத்திய பிரதேசத்தின் சிவபுரியில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியின் அலுவலக மேலாளராக ரகுவீர் குப்தா பணிபுரிந்து வருகிறார்.  இவரது மூத்த மகள் பூனம் குப்தா. கணிதத்தில் இளநிலை பட்டம் பெற்ற பூனம், ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். பின்னர் குவாலியரில் பி.எட் பட்டம் பெற்றார். 2018ல்  யுபிஎஸ்சி சிஏபிஎப் தேர்வை எழுதிய பூனம் சிஆர்பிஎப் படையில் துணை கமாண்டராக பணியில் சேர்ந்தார். தற்போது அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பாதுகாவலராக பணிபுரிந்து  வருகிறார். அவரது நன்னடத்தையால் கவரப்பட்ட முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் பூனமின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக சோனு தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!