அடுத்த அதிர்ச்சி... சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் விரிசல்.. கடைசி நேரத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு!

 
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழியாக சென்னைக்கு நாள்தோறும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.   கொல்லத்தில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 3.10 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். பின்னர் அங்கிருந்து 3.40 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை சென்னையை வந்தடையும்.

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்

இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்தை கடந்து சரியாக நேற்றிரவு 8.46 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் ரயில் பெட்டிகள், இணைப்புகளை சோதனை செய்தனர். 

அப்போது, ரயிலின் எஸ்-3 பெட்டியில் விரிசல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பெட்டி கழற்றி விடப்பட்டது. அதில் இருந்த பயணிகளுக்கு வேறு பெட்டியில் மாற்றுஇடம் வழங்கப்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்

குறித்த நேரத்தில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகளும், ரயில்வே நிர்வாகமும் நிம்மதியடைந்தனர். ஏற்கனவே ஒடிசாவில் பெரும் விபத்து ஏற்பட்டு நாடு முழுவதும் மக்கள் சோகத்தில் இருக்கும் நிலையில், மற்றொரு விபத்து தவிர்க்கப்பட்டது ரயில்வே துறையினருக்கு நிம்மதியை கொடுத்தது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web