குப்பையில் கிடந்த வைர நகை.. நெகிழ்ச்சி தரும் தூய்மைப் பணியாளர்கள் செயல் !!

 
ஜானகி

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி ராஜகீழ்பாக்கம். இங்கு ராதே ஷியாம் அவென் யூ பகுதியில் 65 வயதாகும் ஜானகி என்பவர் வசித்து வருகிறார். 

ஜானகி நேற்று காலை தனது வீட்டை சுத்தப்படுத்தி குப்பையை வாகனத்தில் கொட்டிவிட்டு சென்றார். பின்னர் காதில் அணிந்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைர தோடு மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். சவீடு முழுவதும் தேடி பார்த்திக்கிறார். ஆனால் வீட்டில் எங்குமே இல்லை.

ஜானகி

இதையடுத்து கீழே விழுந்த வைர கம்மலை குப்பைகளுடன் சேர்த்து குப்பை வாகனத்தில் வீசி இருக்கலாம் என கருதி உடனடியாக அப்பகுதியில் குப்பை அள்ளி சென்ற வாகனத்தை கண்டுபிடித்து அதன் மேற்பார்வையாளர் கார்மேகம் என்பவருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்

இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் குப்பையை கிளறி தேடினர். ஒரு மணி நேரம் தேடிய பின் கிடந்த வைர தோடை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். சுகாதார ஆய்வாளர் சிவகுமார், மேலாளர் கார்மேகம் மற்றும் பணியாளர்கள் இணைந்து அந்த வைர கம்மலை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்கள்.

ஜானகி

குப்பையில் இருந்து தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மை பணியாளர்களை பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டுக்களும் பாராட்டி வருகிறார்கள்.

From around the web