மது பார்ட்டியில் தகராறு.. ஆத்திரத்தில் பார்ட்னரை குத்தி கொலை செய்த நண்பர்..!!

 
 சூர்யா

காஞ்சிபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 26). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நான்கு மற்றும் ஐந்து வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

IT professionals seek plots in Perumbakkam

இவரது வீட்டுக்கு எதிர் வீட்டைச் சேர்ந்தவர் கார்த்தி (23). காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் கார்த்திக் சொந்தமாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இருவரும் அவ்வபோது இரவு நேரங்களில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சூர்யா அவ்வப்போது கார்த்திகை வா மது அருந்தலாம் என அழைப்பதுண்டு. இதனால் பலமுறை எரிச்சல் அடைந்த கார்த்திக்கும் இதை வெளியே காண்பிக்க முடியாமல் சூர்யாவை விட்டு விலகிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருவிழாவின் போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சூர்யா கார்த்திக்கை வா மது அருந்தலாம் என அழைத்துள்ளார். சில நாட்களாக பேசாமல் இருந்த நண்பன் மது அருந்த அழைத்ததால்,  ஏதாவது வாக்குவாதம் மற்றும் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணிய கார்த்திக்,  முன்னெச்சரிக்கையாக ஒரு கத்தியை எடுத்து தன்னுடைய வண்டியின் பின்புறம் மறைத்து வைத்துக் கொண்டு ஆரிய பெரும்பாக்கம் வந்து சூர்யாவை தன்னுடைய வண்டியில் ஏற்றிக்கொண்டு  அபிராமி நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கிக்கொண்டு ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி கரைக்கு வந்து இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

young man killed by friend in kanchipuram district vel

நண்பர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கார்த்தி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மது போதையில் இருந்த சூர்யாவை தலை மற்றும் கழுத்தில்  வெட்டி உள்ளார். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்து போன சூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிக ரத்தம் வெளியேறியதால் சூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

அதனைக் கண்டு அதிர்ச்சடைந்த கார்த்திக் வண்டியை எடுத்துக்கொண்டு பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்துக்கு வந்து, நண்பன் சூர்யாவை நானே வெட்டி கொன்று விட்டேன் என கூறி  சரணடைந்துள்ளார். இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என கார்த்திக்கிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தீபாவளி தினத்தன்று ஒரே தெருவில் எதிர் எதிர் வீட்டை சேர்ந்த நண்பர்கள் மது போதையில் கொலை குற்றத்தில் ஈடுபட்டது கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

From around the web