விஜயகாந்த் பிறந்தநாளில் சோகம்... தேமுதிக நிர்வாகி கொடிக்கம்பம் நட முயன்ற போது மின்சாரம் தாக்கி பலி!
தமிழகம் முழுவதும் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.அனைத்து தொகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு சிலையை திறந்து வைத்தார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கொடிக்கம்பம் நட முயன்ற தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நடுக்குப்பம் கிராமத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் கொடிக்கம்பம் உரசி மின்சாரம் தாக்கியது. அப்போது, அவரை காப்பாற்ற முயற்சித்த மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இச்சம்பவம் குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா