ரசிகர்கள் அதிர்ச்சி... மாமியாரை திருமணம் செய்த பிரபல நடிகர்!
தெலுங்கில் பிரபல சீரியலாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது சக்ரவாரம். இந்த தொடர், 2003ம் ஆண்டில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் இந்திரநீல் என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு மாமியாராக நடித்திருந்தார், மேக்னா.இந்த தொடர் ஒளிபரப்பாகி பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இத்தனை ஆண்டுகளில் இந்திரநீல் மற்றும் மேக்னா இருவரும் காதலித்து வந்தனர்.

2003ல் இந்த தொடர் ஒளிபரப்பான போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்தது. இதையடுத்து கொரோனா காலத்தில் இதனை மீண்டும் ஒளிபரப்பு செய்தனர். இந்த சீரியலில் மாமியார்-மருகனாக நடித்தவர்கள், நிஜத்தில் கணவன்-மனைவியாகி விட்டனர். இது அந்த காலத்தில் சர்ச்சையை கிளப்பினாலும், பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சமீபத்தில் தங்களது திருமண நாளை கொண்டாடினர். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

20 வருடங்களாக இந்த தம்பதிகள், குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை. இவர்களிடம் ஒருமுறை இது குறித்து தங்களுக்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும் என்றும், குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லை எனக் கூறினர். ஆனால், இப்போதே தங்களுக்கு 40 வயதாகி விட்டதால் இப்போது குழந்தைகளை பற்றி யோசித்தால் கூட, தங்களுக்கு 60 வயதாகும் போது, குழந்தைகளுக்கு 20 வயதாகும், அப்போது தங்களுக்கு ஏதாவதொன்று ஆகிவிட்டால் என்ன செய்வது எனவும் அவர்களை அதன் பிறகு யார் பார்த்துக்கொள்வது எனவும் கூறியுள்ளனர்.
இப்படி குழந்தைகள் குறித்து தாங்கள் பேசும் போது, தங்களுக்கு நெகடிவாக கமெண்ட் வருவதாகவும், இப்படி செய்வது சரியில்லை என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்திரநீல், தொடர்ந்து சீரியல்களிலும், சில படங்களில் துணை கதாப்பாத்திரமாகவும் நடித்து வருகிறார். அவரது மனைவி மேக்னா சீரியல்களில் நடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
