தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த பிரபல ரவுடி.. அதிரடியாக கைது செய்த ரயில்வே போலீசார்..!!

 
திண்டிவனத்தில் ரவுடி கைது
திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை ரயில்வே போலீசார் கைது செய்து, 17 பவுன் தங்க நகைகள், 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையம் மற்றும் திண்டிவனம் நகரப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல் திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயிலில் செல்லும் பயணிகளிடம் செல்போன், பேக் உள்ளிட்டவற்றை பறித்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த 17ம் தேதி ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் செல்போன், பேக் ஆகியவற்றை மர்ம நபர் பறித்து சென்றார்.

Heavy rain in Tindivanam; Rails are an hour late | திண்டிவனத்தில் கனமழை;  எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணிநேரம் தாமதம்

இதனைத் தொடர்ந்து 19ம் தேதி அதே ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் திலகர் என்பவர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது, திண்டிவனம் ரயில் நிலையத்தில் அவர்கள் வைத்திருந்த பேக் மற்றும் செல்போனை மர்ம நபர் பறித்து சென்றார்.

இது குறித்த புகாரின் பேரில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

From around the web