கல்யாணமாகி ஒரு வருஷம் கூட ஆகல... கணவரை திடீரென பிரிந்த பிரபல சீரியல் நடிகை!

 
ரோஜா

பிரபல தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி  வரும் பிரபல சீரியல் நடிகை ரோஜா.   ரோஜா  சீரியலில் ஹீரோயினாக நடித்து பேமஸ் ஆனவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல்   கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், அதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன்   சீரியலில் நடித்து வந்தார். இதிலிருந்தும்   பாதியிலேயே வெளியேறிய அவர் திடீரென திருமணமும் செய்துகொண்டார்.

ரோஜா
மலேசியாவில் தன்னுடைய காதலனுடன் கோவிலில் ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டு தனது திருமண அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளார்.  மார்ச் மாதம் பிரியங்கா தன்னுடைய காதலனை திருமணம் செய்துகொண்டார். அதோடு அவர் மலேசியாவிலேயே செட்டில் ஆனதால்  இனி சீரியலில் நடிக்க மாட்டார் எனக் கூறப்பட்டது.  
 அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நளதமயந்தி  சீரியலின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.  பிரியங்கா, கடந்த சில நாட்களாக  சமூக வலைதளங்களில் சோகமான பதிவுகளை  பதிவிட்டு   ஷாக் ஆன ரசிகர்கள் என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வந்தனர். அதுமட்டுமின்றி  இன்ஸ்டா  பக்கத்தில் இருந்து அவர் தனது கணவரின் புகைப்படங்களை நீக்கியுள்ளார்.  

ரோஜா
இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலம்  நெட்டிசன்களுடன் கலந்துரையாடிய பிரியங்காவிடம்  நீங்கள் சிங்கிளா என கேள்வி எழுப்பியுள்ளார்.   அவர் ஆமாம் என  பதிலளித்துள்ளார் .  இதனால் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  என்ன காரணத்திற்காக அவர் கணவரை பிரிந்தார் என்பது இதுவரை தெரிவிக்கவில்லை.   திருமணம் ஆகி இன்னும் ஒரு வருஷம் கூட ஆகவில்லை.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web