நெகிழ்ச்சி!! 40ஆண்டுகளாக வீடு வீடாக நடந்து சென்று தபால் கொடுத்த ஊழியருக்கு பிரிவு உபசார விழா!!

 
கண்ணன்

தபால்காரரை தெய்வமாக கொண்டாடியகாலங்கள் எல்லாம் மலையேறிவிட்டன. இப்போதெல்லாம் உள்ளங்கையில் உலகம் வந்து விட்டது. சின்னஞ்சிறு பிள்ளைகள் தொடங்கி வயதானவர்கள் வரை செல்போன் மோகம் தான். கடிதம் எழுதி பதிலுக்காக காத்திருக்கும் பொறுமையெல்லாம் கிடையவே கிடையாது. இ-மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா கிராம் என சமூக வலைதளங்கள் தான் லேட்டஸ்ட் டிரெண்ட். டிரெண்ட் செட்டரில் போஸ்ட் போட்டவுடன் உடனுக்குடன் பதில், லைக், ஷேர் சப்ஸ்கிரைப் செய்துவிட்டு வேலைய பார்க்க போய்விடலாம். ஆனால் இன்னமும் அரசு வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வு, பணி நியமனம் ஆணை என   முக்கிய தகவல்களுக்கான தபால் கடிதங்களே. இந்த தலைமுறையினருக்கான அஞ்சல் தபால் போக்குவரத்தாக உள்ளன. மீதமுள்ள அலுவலக கடிதங்கள், பார்சல் சர்வீஸ் போன்றவற்றிக்காக தனியார் கூரியர் நிறுவனங்கள் உள்ளன   இதன் காரணமாக அஞ்சல் துறையின் சேவை குறைந்து கொண்டே வருகிறது.

தபால்


இந்நிலையில் மதுரை நெல்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக தபால் பட்டுவாடா செய்த அஞ்சல்காரருக்கு அப்பகுதி மக்கள், வியாபாரிகள் ஒன்றிணைந்து அழைப்பிதழ் அச்சடித்து பாசத்துடன் பிரிவு உபசாரவிழா நடத்தியுள்ளனர். பொது மக்களின் பாசத்தால் நெகிழ்ந்த  அஞ்சல்காரர் பெயர் கண்ணன், இதுவரை தினமும் பார்த்து தபால்களைப் பட்டுவாடா செய்த மக்களை இனி பார்க்க முடியாது என்ற ஏக்கத்தில் ஒவ்வொரிடமும் கைகொடுத்து கண் கலங்கியபடி பிரியா விடைபெற்றார்.இவ்விழாவில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் ஹக்கீம்  ‘‘அஞ்சல்காரர் கண்ணன், 40 ஆண்டு காலம் பணிபுரிந்துள்ளார். அவர் தன்னுடைய பணி காலம் முழுவதும் வீடு வீடாக  நடந்து சென்றே தபால்களை பட்டுவாடா செய்து வந்தார். சைக்கிளில் கூட சென்றது இல்லை. மதுரையை தாண்டி டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியில் இருந்து தினமும் பேருந்தில் தான்   அஞ்சல் அலுவலகத்திற்கு வருவார். அங்கு தபால்களைச் சேகரிக்கும் அவர் நடந்தேதான் மாலை வரை மதுரை நெல்பேட்டை, காயிதே மில்லத் நகர், சுங்கம் பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் ஆகியவற்றிற்கு தபால்களை பட்டுவாடா செய்வார்.

போஸ்ட் ஆபீஸ் அஞ்சலகம் அஞ்சல் தபால் சிறுசேமிப்பு
சம்பந்தப்பட்ட இடங்களில் ஆட்கள் இல்லை என்றாலும் போன் செய்து அவர்களுக்காக காத்திருந்து தபால் பட்டுவாடா செய்தார்.  முகவரியில் ஆட்கள் இல்லாவிட்டால் உடனடியாக தபால்களைத் திருப்பி அனுப்பமாட்டார். அவர்கள் உறவினர்கள் மூலம் முடிந்தவரை அந்த தபால்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப் பார்ப்பார். படிக்க தெரியாதவர்களிடம் தபால்களைப் பிரித்து பொறுமையாக படித்து காட்டுவார்.  மக்களிடம் மிக நெருக்கமாக பணிபுரிந்ததால் அவருக்கு பாராட்டு விழா நடத்தினோம் ’’ என்றார்.
இது குறித்து தபால்காரர்  கண்ணன்  ‘‘நான் தபால்பட்டுவாடா செய்வதற்காக நடந்து செல்லும்போது அந்த வழியாக வரும் மக்கள், என்னை அவர்களது வாகனத்தில் ஏற்றிச் சென்று அடுத்து தபால் பட்டுவாடா செய்யும் இடத்தில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள். இந்தளவிற்கு மக்கள் என் மீது பாசமாக இருந்தார்கள். அவர்களுக்கும் நேர்மையாக சேவை செய்துள்ளேன்.   அந்த நேர்மைக்கும், என்னுடைய கடமைக்கும் கிடைத்த பரிசு தான் இந்த  பாராட்டு   விழா ’’ என்றார் நெகிழ்ச்சியாக.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web