பரபரப்பு... சமையல் கேஸ் சிலிண்டர் ஏற்றிச்சென்ற லாரியில் தீ விபத்து!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதில் திடீரென ஒரு சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதிலிருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனையடுத்து லாரி முழுவதும் தீ பரவ தொடங்கிய நிலையில், லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை கரையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது.
லாரியில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!