சாலையில் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்..!

 
குஜராத் பேருந்து தீ விபத்து
குஜராத்தில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்திற்கு அருகே மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 16 பயணிகளுடன் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது."பேருந்தில் 16 பயணிகள் இருந்தனர், அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்" என்று போலீசார் தெரிவித்தனர்.


இந்த சம்பவத்தால் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலை சுமார் 2 மணி நேரம் மூடப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Close shave for 16 passengers as bus catches fire in Gujarat's Valsad -  Articles

மளமளவென பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து காரணம் அறியப்படாத நிலையில், காவல்துறையினர் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web