குவியும் மக்கள் வெள்ளம்... காணும் பொங்கலையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
பேருந்து


இன்று காணும் பொங்கல் தினத்தையொட்டி காலை முதலே பொழுதுபோக்கு பூங்காக்கள், கோவில்கள், சுற்றுலா தலங்கள், கடற்கரை என்று திரும்பும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தினருடன் குவிய தொடங்கியுள்ளனர். 

அரசு பேருந்து

இந்நிலையில் சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்களின் வசதியை கருத்திக் கொண்டு மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்ககப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேருந்து

இன்று வழக்கத்தை விட 500 பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகின்றன என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! .

From around the web