அதிர்ச்சி வீடியோ... மைதானத்தில் கால்பந்து வீரர் மின்னல் தாக்கி பலி!

 
கால்பந்து

இந்தோனேசியாவில்   பிப்ரவரி  11ம் தேதி FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் அணிகளுக்கு இடையேயான  கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி  நடைபெற்றுக்  கொண்டிருக்கும்போது கால்பந்து வீரர் ஒருவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார் 
இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது கால்பந்து வீரர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது  அவரிடம் பந்தை பாஸ் செய்ய மற்றொரு வீரர் ஆர்வமாக இருந்தார்.
 அப்போது, மின்னல் தனியாக நின்று கொண்டிருந்த வீரரை தாக்குகிறது. இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து அந்த வீரர்    கீழே விழுந்த நிலையில், சக வீரர் வேகமாக ஓடிச் சென்று பார்க்கிறார். உடனடியாக அவரை மீட்டு  மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.   ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவித்துள்ளனர்.  

கால்பந்து

கால்பந்து போட்டியின்போது ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிரேசிலின் கால்பந்து மைதானத்தில்   மின்னல் தாக்கியதில் 21 வயது வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 2022ல், ஜார்க்கண்டின் கோமியா மாவட்டத்தில்  ஹசாரி கிராமத்தில் கால்பந்து போட்டியில்  19 வயது இளைஞன் மின்னல் தாக்கி உயிரிழந்தது   குறிப்பிடத்தக்கது.கால்பந்து வீரர் மின்னல் தாக்கி உயிரிழந்தது சக வீரர்கள், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

From around the web