நள்ளிரவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து... 60 பயணிகளின் நிலை என்ன? தூத்துக்குடியில் பயங்கரம்!

 
நடுரோட்டில் அரசு பேருந்தில் தீ நடுரோட்டில் அரசு பேருந்தில் தீ

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, நள்ளிரவில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும், பயணிகளின் துரித முடிவாலும் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

நேற்று மார்ச் 21ம் தேதி சனிக்கிழமை இரவு, தூத்துக்குடி பணிமனைக்குச் சொந்தமான அரசுப் பேருந்து சுமார் 60 பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டது. இரவு 11:30 மணியளவில், தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் மேம்பாலம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, அதன் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து!

புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தினார். பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பேருந்தின் முன் மற்றும் பின் கதவுகள் வழியாகக் கீழே குதித்து வெளியேறினர்.

பேருந்து முழுவதுமாகத் தீப்பிடிப்பதற்குள் அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதால், 60 பேரும் எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினர்.  இது குறித்து தகவல் அறிந்தவுடன் தூத்துக்குடி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடித் தீயை அணைத்தனர். இருப்பினும், பேருந்து உட்புறம் மற்றும் என்ஜின் பகுதி பலத்த சேதமடைந்தது.

தீ தீயணைப்பு வெடிவிபத்து பட்டாசு

ஆரம்பக்கட்ட விசாரணையில், பேருந்தின் பேட்டரி அல்லது என்ஜின் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது குறித்துப் புதுக்கோட்டை காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பராமரிப்புக் குறைபாடு ஏதும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.