ரூ20க்கு காலை டிபன்!! ரயில் பயணிகளுக்கு அட்டகாசமான ஆபர்!!

 
ரயில்  உணவு

தொலை தூர பயணங்களை பொறுத்தவரை பெரும்பாலான நடுத்தர மக்களின் ஒரே விருப்பமாக இருப்பது ரயில் பயணங்கள்தான். குறைவான செலவில் நீண்டதூரம் செல்ல முடியும். தினசரி ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் ரயில் பயணிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை  வழங்குவதில் இந்தியன் ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக   ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர், ஓய்வறை, டிக்கெட் சலுகை இவைகளை முறைப்படுத்தி வருகிறது.  

ரயில்  உணவு
அதன் தொடர்ச்சியாக தற்போது பொது ரயில் பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு ரூ.20க்கு காலை உணவும் ரூ. 3 க்கு 200 மிலி அளவு தண்ணீரும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.   இந்த உணவு விற்பனை சோதனை அடிப்படையில் கேரளாவின் திருவனந்தபுரம் உட்பட 64 ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது படிப்படியாக இந்தியா முழுவதும் இந்த உணவு விற்பனை சேவை கொண்டுவரப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரயில் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

ரயில் உணவு

ரயிலில் பொது பெட்டிகளில் பயணிப்பவர்கள்  ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளையே நம்பி இருக்க வேண்டியதுள்ளது.இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு  வடக்கு மண்டலத்தில் உள்ள 59 ரயில் நிலையங்களில் மலிவு விலைக்கு உணவு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 14 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது  முன்பதிவில்லாத பொது பெட்டிகள் நிற்கும் நடைமேடைகள் அருகே, இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  இந்தக் கடைகளில் 7 பூரிகள் மற்றும் உருளைக்கிழங்கு, ஊறுகாய் அடங்கிய மலிவு விலை உணவு 20 ரூபாய்க்கும், அரிசி சாதம், கிச்சடி, மசாலா தோசை  இவைகளில்  ஏதேனும் ஒன்று காம்போ உணவு வகையாக 50 ரூபாய்க்கும் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web