திருமண விழாவிற்கு தாமதமாக வந்த போட்டோகிராபர் குழு.. ரூ.35,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

 
கல்யாணம் திருமணம் புகைப்படம் கேமரா போட்டோஷூட்

திருமண விழாவிற்கு குறித்த நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்த புகைப்படக் கலைஞர் குழுவிற்கு, சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி ரூ.35,000 அபராதம் விதித்து கர்நாடக நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட புகைப்படக் குழுவினர், விழாவிற்கு சுமார் 70 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்திற்குப் புகைப்படக் கலைஞர்கள் வராததால், திருமணத்தின் மிக முக்கியமான சில ஆன்மீகச் சடங்குகளைப் படம் பிடிக்க முடியாமல் போய்விட்டதாகத் தம்பதியினர் கவலையடைந்தனர். மேலும், தங்களின் தாமதம் குறித்து அந்தப் புகைப்படக் குழுவினர் முன்னதாக எந்தவிதத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

5வது திருமணம்

புகைப்படக் குழுவின் இந்த அலட்சியப் போக்கினாலும் சேவை குறைபாட்டினாலும் மன உளைச்சலுக்கு ஆளான மணமக்களின் குடும்பத்தினர், உரிய நியாயம் கேட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், புகைப்படக் குழுவின் சேவை குறைபாட்டை உறுதி செய்து, பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு ரூ.35,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அந்தப் புகைப்படக் குழுவிற்கு உத்தரவிட்டது.

திருமணம் கல்யாணம் கும்பம்

சுப நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படும் சேவை அமைப்புகள் உரிய நேரத்தில் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.