பயங்கர தீ விபத்து... பெற்றோரை காப்பாற்றி விட்டு... தீயில் சுருண்டு விழுந்த பிரபல குத்துச்சண்டை வீரர்... தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

 
மார்க் கோல்மேன்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரைச் சேர்ந்தவர் மார்க் கோல்மேன். இவர் முன்னாள் UFC ஹெவிவெயிட் சாம்பியன் ஆவார். மார்க் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் சொந்த வீட்டில் வசிக்கிறார். இவர்களது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றும் வளர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மார்க் கோல்மனின்   வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. மார்க் வீட்டில் இருந்தபடியே பெற்றோரை ஒவ்வொருவராக காப்பாற்றினார். இதற்கிடையில், வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், நாய் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் சிக்கியது.

இதைத் தொடர்ந்து, மார்க் வீட்டிற்குள் சென்று நாயைக் காப்பாற்ற முயன்றார், ஆனால் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர் நாயை பத்திரமாக கொண்டு வந்தபோதும் அந்த நாய் பரிதாபமாக இறந்தது. மார்க், கரும்புகையை சுவாசித்தது உட்பட பலத்த தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

தீவிபத்து குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதால், மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மார்க்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தொடர்ந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். குத்துச்சண்டை வீரரான மார்க், தனது பெற்றோரைக் காப்பாற்றி விட்டு  உயிருக்குப் போராடுகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web