உடனே விண்ணப்பியுங்க... வருஷத்துக்கு ரூ.11 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

 
வேலை வாய்ப்பு
 


 

இந்தியாவின்  முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று  NTPC Green Energy Limited.இந்நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் நிர்வாக பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆண்டு வருமானம் : ரூ11 லட்சம்  

வேலை வாய்ப்பு


விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 1, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் BE/B.Tech முடித்தவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள துறையில் தகுதியான பட்டதாரிகள்  
பணியிடங்கள்  : Engineer (Civil – 40 இடங்கள்), Engineer (Electrical – 80), Engineer (Mechanical – 15), Engineer (IT – 4), Engineer (Material – 10), Executive (HR – 7), Executive (Finance – 26) 
வயது : 30 வயதுக்குள் இருக்கவேண்டும்.

வேலை வாய்ப்பு


பொறியாளர் பணிகளுக்கு குறைந்தது 3 ஆண்டு அனுபவமும், HR பதவிக்கு 2 ஆண்டு அனுபவமும் அவசியம். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது சலுகை வழங்கப்படுகிறது. SC/ST பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது.
விண்ணப்ப கட்டணம் : ரூ.500 
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
எழுத்துத் தேர்வு சென்னையில் நடத்தப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.ngel.in இணையதளத்தில் மே 1, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

From around the web