முதுகைச் சொரிந்து விடும் வேலை... மாதம் ரூ.14 லட்சம் வருமானம் ஈட்டும் நபர்!
Sep 4, 2026, 17:00 IST
சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் முதுகைச் சொரிந்து விடும் எளிய செயலை லாபகரமான தொழிலாக மாற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் தனது கணவருக்கு முதுகு சொரிவதைப் பார்த்தபோது, ஜாங் என்பவருக்கு இந்த விசித்திரமான தொழில் யோசனை தோன்றியுள்ளது.
இந்தச் சேவைக்காக இவர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.4,200 வரை கட்டணமாக வசூலிக்கிறார். இதன் மூலம் இவருக்கு மாதம் தோறும் சுமார் ரூ.14 லட்சம் வரை வருமானம் ஈட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
இவரிடம் முதுகு சொரியும் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்கள், இந்தச் சேவை தங்களது மன அழுத்தத்தைக் பெருமளவில் குறைத்து உடலை முழுமையாக ரிலாக்ஸ் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
