அடிச்சது பாரு லக்.. லாட்டரி சீட்டை விற்று கோடியில் புரளும் கேரள தம்பதி..!!

 
மேரிகுட்டி - ஜோஜோ

லாட்டரி சீட்டை விற்பனை செய்து கேரள தம்பதி கோடிக்கணக்கில் சம்பாதித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த லாட்டரி ஏஜென்ட் தம்பதிகள் விற்ற டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக ரூ.12 கோடியும், இரண்டாம் பரிசாக 1 கோடியும் கிடைத்தது.மாநில அரசின் பூஜா பம்பர் ஜாக்பாட் வென்ற டிக்கெட்டை மேரிகுட்டி விற்ற நிலையில், அவரது கணவர் ஜோஜோ இரண்டாவது பரிசான ரூ.1 கோடி டிக்கெட்டை விற்றார்.

கேரளா பூஜா பம்பர் லாட்டரி

இந்த தம்பதியினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாரத் லாட்டரி ஏஜென்சி என்ற பெயரில் லாட்டரி ஏஜென்சியை நடத்தி வருகின்றனர். அவர்கள் முக்கியமாக காசர்கோடு, கண்ணூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் லாட்டரி விற்பனை செய்து வருகின்றனர்."என் மனைவி மேரிகுட்டி விற்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இரண்டாம் பரிசு தலா 5 பேருக்கு 1 கோடி வழங்கப்பட்டது, அதில் ஒரு டிக்கெட்டை விற்றேன். அதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். அதிர்ஷ்டசாலிகளை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். " ஜோஜோ கூறினார்.

காசர்கோட்டில் உள்ள ஏஜென்சியைத் தவிர, தம்பதியினர் தங்கள் காரில் லாட்டரி விற்கிறார்கள். கண்ணூரை பூர்வீகமாக கொண்ட இவர்கள், 2013ல் காசர்கோடுக்கு இடம் பெயர்ந்தனர். முன்னதாக ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.5,000க்கு வெற்றிபெறும் டிக்கெட்டுகளை விற்றுள்ளனர், ஆனால் பம்பரை விற்றது இதுவே முதல் முறை. மேரிகுட்டியும் ஜோஜோவும் அதிர்ஷ்ட டிக்கெட்டை யாருக்கு கொடுத்தார்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் கர்நாடக எல்லைக்கு அருகில் வசிப்பதால், அது அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த யாரோ இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த நிலையில் பம்பர் லாட்டரியை விற்றதன் மூலம் மேரி குட்டிக்கு 1.2 கோடி ரூபாயும் அவரது கணவருக்கு 10 லட்சம் ரூபாயும் ஏஜென்ட் கமிஷனாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் காசர் கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 25 ஆயிரம் பூஜா லாட்டரி பெற்று விற்பனை செய்துள்ளனர்.

கணவன் மனைவிக்கு அடித்த ஜாக்பாட்

மேலும், லாட்டரியானது மாநில அரசின் நிதிக்கு பங்களிக்கிறது என்றும், வெற்றி ஒரு தனிநபரின் வாழ்க்கையை மாற்றும் என்பதால் அதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தம்பதியினர் தெரிவித்தனர். ஓணம், பூஜை, கிறிஸ்துமஸ்-புத்தாண்டு, கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் விஷூ போன்ற ஆறு பம்பர் லாட்டரிகளை கேரள அரசு கொண்டுள்ளது.

From around the web