பூட்டிய வீட்டிற்குள் சடலத்தைக் கட்டிப்பிடித்தபடி கிடந்த நபர் - சிவகங்கையில் பரபரப்பு!

 
சிவகங்கையில் கொலை

சிவகங்கை ஒளவையார் தெருவைச் சேர்ந்த 60 வயதான சித்தாள் ஜோதி வீட்டிற்குள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது சடலத்தைக் கட்டிப்பிடித்தபடி மதுபோதையில் கிடந்த கொத்தனார் ராசுக்குட்டியைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

சிவகங்கை ஒளவையார் தெருவைச் சேர்ந்த 60 வயதான சித்தாள் ஜோதியும், கொட்ட குடியைச் சேர்ந்த கொத்தனார் ராசுக்குட்டியும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த நவம்பர் 25-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மறுநாள் இருவரும் வேலைக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இருவரும் வேலைக்கு வராததால் சந்தேகமடைந்த மேஸ்திரி, மாலையில் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். வீடு பூட்டப்பட்டிருந்ததால் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜோதி உயிரிழந்து கிடந்ததும், அவரது உடலைக் கட்டிப்பிடித்தபடி ராசுக்குட்டி மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

போலீசார் ரோந்து போலீஸ் காவலர் கொலை கொள்ளை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகங்கை நகர் போலீசார், ஜோதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா அல்லது உடல்நலக்குறைவால் ஏற்பட்ட மரணமா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையிலேயே தெரியவரும் எனத் தெரிவித்துள்ள போலீசார், ராசுக்குட்டியைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.