பெண்களை வீடியோ எடுத்த வடமாநிலத்தவர்.. புகார் அளித்த இளைஞரை அவமதித்த போலீசார்..!!

 
திருச்செந்தூர்  வட மாநில தொழிலாளர்கள்

பேருந்தில் பெண்களை வீடியோ எடுத்தவரை பற்றி தகவல் தெரிவித்த வாலிபர் செல்போனை போலீசார் பறிமுதல் செய்ததால் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் போலீசுக்கும், வாலிபருக்கும்  சுமார் 1 மணி நேரமாக கடுமையான வாக்குவாதம்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கல்லாமொழியில்  அனல்மின் நிலையம் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 2000 வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குலசேகரன்பட்டினத்திலிருந்து திருச்செந்தூர் வந்த அரசு பேருந்தில் வந்த பெண்களை  வட மாநில தொழிலாளர்கள் செல்போனில் வீடியோ எடுத்தாக கூறப்படுகிறது. பேருந்தில் வந்த வாலிபர் ஒருவர் இதுகுறித்து திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த காவலர் ரத்தின முத்துவிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ரத்தினமுத்து வீடியோ எடுத்தவர்களை விசாரிக்காமல் தகவல் தெரிவித்த வாலிபர் செல்போனை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் காவலர் ரத்தினமுத்துவிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரம்  வாக்குவாதம் நடந்தது. இதனால் பேருந்து நிலையத்தில் கூட்டம் கூடியது. இந்த நிலையில் அங்கு நின்ற திருநங்கைக்கும்,  காவலர் ரத்தினமுத்துவிற்க்கும், திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்த பயனிகள் 100 க்கு தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கர், தலைமை காவலர் வாசன் வந்தனர். வந்த வேகத்தில் தலைமை காவலர் வாசன் சம்பவம் குறித்து விசாரிக்காமல் அந்த வாலிபர் கண்ணத்தில் பளாரென்று அறைந்தார். இதனையடுத்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு ஆட்டோவில் அந்த வாலிபரை அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரும்,வாலிபரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

From around the web