திருட்டு வழக்கில் கைதாகி, தப்பியோடி 40 ஆண்டுகளாகப் போலி சாமியாராக வலம் வந்தவர் பேஸ்புக் மூலம் போலீசில் சிக்கிய விநோதம்!

 
க்ரைம் போலி சாமியார்

உத்தரப் பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைதாகிப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி, போலி சாமியாராகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் முகநூல் மூலம் காவல்துறையினரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகர் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரகாஷ். கடந்த 1986-ஆம் ஆண்டில் திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் பசல்கஞ்ச் காவல் நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர், ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்ற விசாரணையின் போது தலைமறைவானார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

போலீசாரிடம் சிக்காமல் இருக்க சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள பரேலி பகுதிக்குத் தப்பிய அவர், சாமியார் வேடத்தை அணிந்துகொண்டு ஆசிரமம் ஒன்றை நிறுவி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். இதனால் பல ஆண்டுகளாக அவரை யாராலும் அடையாளம் காண முடியவில்லை.

காவல்துறையினர் நம்மை இனி நெருங்க முடியாது என அவர் உறுதியாக நம்பியிருந்த நிலையில், அவரது முகநூல் ஐ.டி.யே அவர் சிக்கிக்கொள்ளக் காரணமாக அமைந்தது. முகநூலில் அவர் இணைந்திருந்த நண்பர்களின் பட்டியல் மூலம் கான்பூர் பசல்கஞ்ச் காவல் நிலையத்திற்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ரவுடி போலீசார் கைது கொலை

இதனையடுத்து உடனடியாக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் பரேலியில் உள்ள ஆசிரமத்திற்குச் சென்று போலி சாமியார் வேடத்தில் இருந்த ராம்பிரகாஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 40 வருடங்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒரு சிறிய சமூக வலைதளத் தடம் மூலம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.