பெண்கள் டிரஸ் மாற்றுவதை ரகசிய கேமராவில் லைவ் ஒளிபரப்பிய நபர் - சென்னையில் அதிர்ச்சி!
சென்னை வானகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தனியார் நிறுவனப் பெண்களின் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானகரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் பெண்கள், தங்களது அறையில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸில் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அந்த ரகசிய கேமரா மூலமாகப் பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் இணையம் வழியாகத் தடையின்றி லைவ் ஆகப் பார்க்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வானகரம் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு சரவணன் என்ற குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரகசிய கேமராவைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
