நீதித்துறை வரலாற்றில் மைல்கல்... சென்னையில் அமைகிறது உச்ச நீதிமன்றத்தின் கிளை!
இந்திய நீதித்துறையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மிக முக்கியமான மாற்றமாக, உச்ச நீதிமன்றத்தின் புதிய மண்டலக் கிளைகளை நாட்டின் நான்கு பிராந்தியங்களில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிரந்தரக் கிளைகள் அமைக்கப்படவுள்ளன. வடக்கு மண்டலம்: புதுடெல்லி (தலைமை அரசியல் சாசன அமர்வு மட்டும் இங்கு செயல்படும்). தெற்கு மண்டலம்: சென்னை. கிழக்கு மண்டலம்: கொல்கத்தா. மேற்கு மண்டலம்: மும்பை

சென்னையில் அமையவுள்ள இந்தத் தெற்கு மண்டலக் கிளை, உச்ச நீதிமன்றத்தின் முழு அதிகாரங்களுடன் செயல்படும். அரசியல் சாசன வழக்குகள் தவிர்த்து, மற்ற அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளும் இனி சென்னையில் உள்ள கிளையிலேயே விசாரிக்கப்படும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையின் மூலம், தமிழகம் உள்படத் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நீதி கேட்டு டெல்லிக்குச் செல்லும் அலைச்சலும், அதற்காக ஆகும் கூடுதல் செலவுகளும் பெருமளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
