சாலை பணியாளர்கள் மீது மோதிய மாஜிஸ்திரேட் கார்... குழந்தை உட்பட 3 பேர் பலியான சோகம்!

 
மாதேபுரா மாஜிஸ்திரேட் கார்

சாலை பணியில் வேலை செய்து கொண்டிருந்த தாய் மற்றும் குழந்தையின் மீது  மாஜிஸ்திரேட்டின் வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீகார் மாநிலம், மாதேபுரா மாஜிஸ்திரேட் விஜய் பிரகாஷ் மீனாவின் கார் தங்கங்காவில் இருந்து மாதேபுரா நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரில் மாஜிஸ்திரேட் இல்லை என்று கூறப்படுகிறது. புஸ்பரஸ் காவல் நிலையத்திற்கு உள்பட்ட புர்வாரி தோலா அருகே தேசிய நெஞ்சாலையில் செல்லும் போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது. அத்துடன் சாலையோர தண்டவாளத்தில் மோதி நின்றது.

விபத்தை ஏற்படுத்திய கார்.

அப்போது சாலைப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த குடியா குமாரி(35), அவரது ஐந்து வயது மகள் மற்றும் மற்றொரு ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ராஜஸ்தானைச் சேர்ந்த அசோக்குமார் சிங், ராஜேஸ்குமார் சிங் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய கார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை புஸ்பரஸ் காவல் நிலைய அதிகாரிகள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அந்த காரை அடித்து சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web