நடு ரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பி.. தெரியாமல் கால் வைத்த தாய்.. 9 மாத குழந்தையுடன் உடல் கருகி பலி..!!
Nov 19, 2023, 13:50 IST

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அறந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த தாய் மற்றும் 9 மாத குழந்தை தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை பேருந்து மூலம் பெங்களூரு வந்து சாலையை கடக்க முயன்றபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
கணவர் கண் முன்பே மனைவியும், குழந்தையும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த பெண், சென்னையைச் சேர்ந்த சவுந்தர்யா (23) என தெரியவந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
From around the
web