நெஞ்சை பதற வைக்கும் வீடியோ... கைக்குழந்தையுடன் பாதாளக் குழியில் விழுந்த தாய்!

 
பாதாளக்குழி


இன்றைய வாழ்க்கை முறையில் கைகளில் ஆறாம் விரலாய் செல்போன்கள் முளைத்துவிட்டன. அருகில் இருப்பவர்களை கவனிக்காமல் தூரத்தில் யாருடனோ எப்போதுமே பேசிக்கொண்டே இருக்கின்றனர்.  செல்போனில் நீண்ட நேரம் மூழ்கிக்கிடப்பதால் சுற்றி நடப்பதை கூட கவனிப்பதில்லை.

செல்போனில் நீண்ட நேரம் நேரத்தை செலவிடுவதால் மனம் மற்றும் உடல் நலன் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் செல்போன் பயன்பாட்டால் இளைஞர்கள் சில நேரங்களில் விபரீதங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.    அதாவது ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் இளம் பெண் ஒருவர் சாலையில் கைக்குழந்தையுடன் நடந்து செல்கிறார். அந்த பெண்மணி செல்போனில் பேசிக் கொண்டே நடந்து சென்றார்.  

அப்போது சாலையில் பாதாளக்குழி இருந்ததை கவனிக்கவில்லை. செல்போன் பேசியதால் அதனை கவனிக்காமல் பெண் குழிக்குள் கைக்குழந்தையுடன் விழுந்துவிட்டார். மேலும் இது குறித்த   சிசிடிவி வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணின் கவனக்குறைவுக்கு கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.   

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web