அதிர்ச்சி!! வேகமெடுக்கும் மர்ம நோய்!! சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்!!

 
டோலி

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளனர். முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதே நேரத்தில் மழை நேரத்து நோய்களும் வேகமெடுத்து பரவி வருகின்றன.

மழை

அந்த வகையில் தெலுங்கானா மலைக்கிராமத்தில் மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது. அங்கு மருத்துவமனைகளும் கிடையாது. போதிய சாலை வசதிகளும் அமைக்கப்படவில்லை. இதனால் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களை  டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.  தெலுங்கானா மாநிலம் உலுக்கு மாவட்டத்தில் உள்ள சீதாராம்புரத்தில் திடீர் வாந்தி, மயக்கம், கடும் சோர்வால் பழங்குடியின மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், லக்சிமய்யா என்பவரும் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.  

வெள்ளம்


போதிய சாலை வசதி இல்லாததால் அவரை டோலி கட்டி ஆர்ப்பரித்துச் செல்லும் ஆற்றின் நடுவே கிராமத்தினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். சீதாராம்புரம் கிராமத்தில் பலர்  மர்ம நோயின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அரசு முகாம்கள் அமைத்து நிலைமையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தொடர்  கனமழை உட்பட மோசமான வானிலை காரணமாக சுகாதாரத்துறையினர் அங்கு செல்வதற்கான வழிகள் இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.   இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web