ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது புதிய வழக்கு... அக்.21 வரை நீதிமன்றக் காவல்!
Oct 7, 2026, 18:01 IST
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, மதுரையில் பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது மதுரையில் புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, சென்னை போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். பத்மா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வீரமணியை அக்டோபர் 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே, வீரமணியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காகக் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
