தமிழகத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!
Sep 14, 2026, 16:35 IST
செப்டம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் வடக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு வங்கக்கடலில் செப்டம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் புதிய புயல் சின்னம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார்.

உருவாகும் இந்த புயல் சின்னமானது, தென்மேற்குப் பருவமழை வழக்கமான காலக்கட்டத்தில் இருந்து பின்வாங்கும் நிகழ்வை மேலும் தீவிரப்படுத்தவும் வேகப்படுத்தவும்க்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் வரும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் தென்மேற்குப் பருவமழை முழுமையாக விடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
