புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... இன்று இரவுக்குள் மீனவர்கள் கரைக்கு திரும்ப உத்தரவு!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதைத் தொடர்ந்து, கடலுக்குச் சென்றுள்ள தமிழக மீனவர்கள் இன்று நவம்பர் 12ம் தேதி இரவுக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மீனவர்கள்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, நாளை நவம்பர் 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் அது வலுப்பெற்று, நன்கு குறிக்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். அதன் நகர்வு மற்றும் தீவிரத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட வானிலை நிலவரம் தெரியவரும். 

 23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இதையடுத்து, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ள விசைப்படகுகள் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரைக்கு வந்ததும் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.