புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது... வட தமிழகம், ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் என கணிப்பு!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாகவும், அது தீவிரமடைந்து தமிழகம் மற்றும் ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அந்தமான் கடல் பகுதியில் உருவாக இருக்கும் இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, உருவான பிறகு மேலும் வலுவடைந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறுமா என்பது குறித்துத் தாழ்வுப்பகுதி உருவான பின்னரே உறுதியாகக் கூற முடியும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த

இதற்கிடையே, ஆந்திராவில் கரைக் கடந்த 'அர்னாப்' புயலானது தனது தீவிரத்தை முற்றிலும் இழந்து பலவீனமடைந்துள்ளதாகவும், அது தற்போது வடக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் கொந்தளிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் இந்த புதிய வானிலை மாற்றம் தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் மழைப்பொழிவை உருவாக்குமா என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.