வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

நவம்பர் 13 தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. நவம்பர் 15ம் தேதி அது நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

வங்கக்கடலில் உருவாகும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், இந்த புதிய வானிலை மாற்றம் குறித்துத் தமிழக அரசு மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.