புது ட்ரெண்ட்... காதலர்கள் போல் கட்டிப்பிடித்து போட்டோ ஷூட் எடுக்க ரூ.1 லட்சம் கட்டணம்!
சீனாவில் இளம் பெண்கள் மத்தியில் காதலின் அரவணைப்பை உணரும் வகையில் போட்டோ ஷூட் செய்துகொள்ளும் புதிய மற்றும் விசித்திரமான டிரெண்ட் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. இதற்காகப் பிரத்யேக ஸ்டுடியோக்களை நாடும் பெண்கள், அங்குள்ள ஆண் மாடல்களைத் தேர்ந்தெடுத்துக் காதலர்களைப் போலப் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
ஸ்டுடியோக்களுக்குச் செல்லும் பெண்கள், தங்களுக்குப் பிடித்தமான ஆண் மாடல்களைத் தேர்வு செய்து, அவர்களுடன் கைகோர்த்து நடப்பது, கட்டிப்பிடிப்பது, ஒருவரையொருவர் பாசத்துடன் பார்த்துக் கொள்வது போன்ற ரொமான்டிக்கான காட்சிகளில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்கின்றனர்.

ஆண் மாடல்களின் தோற்றம், அவர்களின் புகழ் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து இந்தச் சேவைக்கான கட்டணம் மாறுபடுகிறது. சில பிரபல ஸ்டுடியோக்களில் ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த புதிய போட்டோ ஷூட் கலாச்சாரம் தற்போது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
