இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்.. பதிவிட்ட போஸ்ட்களின் ஆடியோவை மாற்றும் வசதி அறிமுகம்!

 
இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் பயனர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், பிரபல சமூக வலைத்தள நிறுவனமான மெட்டா புதிய வசதி ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ பதிவிட்ட பிறகு, அதில் பின்னணியில் இணைக்கப்பட்ட ஆடியோவையோ அல்லது பாடலையோ மாற்ற முடியாது என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்கள் பழைய பதிவுகளை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்:

ஏற்கனவே நீங்கள் கணக்கில் பதிவேற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ போஸ்ட்களில்  உள்ள பாடல்கள் அல்லது ஆடியோக்களை, இப்போது உங்களுக்கு விருப்பமான வேறு புதிய ட்ரெண்டிங் ஆடியோவாக மாற்றிக் கொள்ள முடியும்.

காப்பிரைட் பிரச்சனைகளால் ஆடியோ முடக்கப்பட்ட போஸ்ட்கள் அல்லது பழைய டிரெண்டில் பதிவிடப்பட்ட வீடியோக்களுக்குப் புதிய ஆடியோவை இணைப்பதன் மூலம், அந்த பழைய பதிவுகளுக்கு மீண்டும் அதிக ரீச் பெற இந்த அம்சம் பெரிதும் உதவும்.

மெட்டா நிறுவனத்தின் இந்த புதிய அப்டேட் இன்ஸ்டாகிராம் பயனர்கள் மற்றும் 'கண்டென்ட் கிரியேட்டர்கள்' மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.