வாட்ஸ் அப்பில் புது அப்டேட்... இனி நம்பரைச் சேமிக்கவும், முகவரியைத் தேடவும் ஒரே டச் போதும்!

 
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு வசதியாக, உரையாடல்களில் பகிரப்படும் தகவல்களை அடையாளம் கண்டு அதற்கேற்ற செயல்களைப் பரிந்துரைக்கும் புதிய அம்சம் அறிமுகமாகி வருகிறது. 'ஸ்மார்ட் டெக்ஸ்ட் ஆக்ஷன்ஸ்' (Smart Text Actions) என அழைக்கப்படும் இந்த வசதி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.

View this post on Instagram

A post shared by The Routine Tech (TRT) (@theroutinetech)

இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப் செய்திகளில் இடம்பெறும் தொலைபேசி எண்கள், தேதிகள், நேரம், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் வீட்டு முகவரிகளைச் செயலி தானாக அடையாளம் காணும். அவ்வாறு கண்டறியப்படும் தகவல்களின் கீழ் புள்ளிக்கோடு தோன்றும். அதைத் தொட்டால், அதற்கான செயல்களின் பட்டியல் திரையில் தெரியும்.

WhatsApp में आया कमाल का फीचर, चैट में ही सेव होंगे फोन नंबर और बनेंगे इवेंट, Gadgets Hindi News - Hindustan

தொலைபேசி எண்ணைச் சேமிக்கவோ, நகலெடுக்கவோ அல்லது அழைக்கவோ முடியும். தேதி மற்றும் நேரத்தை நாட்காட்டியில் சேர்த்து நிகழ்வை உருவாக்கலாம். முகவரியை வரைபடச் செயலியில் திறந்து வழியைக் கண்டறியலாம். மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி நேரடியாக மின்னஞ்சல் அனுப்பவும் வழி கிடைக்கும்.