சனி கிரகத்தின் தென் துருவத்தில் 10 பக்கங்களைக் கொண்ட புதிய அலை வடிவம் கண்டுபிடிப்பு!
சூரிய குடும்பத்தில் உள்ள சனி கிரகத்தின் தென் துருவப் பகுதியில் 10 பக்கங்களைக் கொண்ட பிரம்மாண்டமான அலை வடிவம் ஒன்றை விஞ்ஞானிகள் கடந்த 1980-களில் நாசாவின் 'வாயேஜர்' விண்கலங்கள் அனுப்பிய புகைப்படங்களின் மூலம் சனி கிரகத்தின் வட துருவத்தில் 6 பக்கங்களைக் கொண்ட அலை வடிவம் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில், வட துருவத்தைப் போலவே சனி கிரகத்தின் தென் துருவத்திலும் அலை வடிவம் இருப்பது உறுதியாகியுள்ளது. இது 10 பக்கங்களைக் கொண்ட தனித்துவமான வடிவமாகும்.
வட துருவத்தில் உள்ள வடிவத்தை விடத் தென் துருவத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த அலை வடிவம் மிகவும் பெரியதாகவும், நிலையானதாகவும் உள்ளது. இதன் ஒரு பக்கத்தின் நீளம் மட்டும் சுமார் 16,700 கிலோமீட்டர் வரை இருப்பது விஞ்ஞானிகளால் கணக்கிடப்பட்டுள்ளது.
சனி கிரகத்தின் தென் துருவம் பூமியின் பார்வைக்கு எதிர்புறமாக இருந்த 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்த விசித்திரமான வளிமண்டல வடிவம் உருவானிருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
