கள்ளக்காதலால் கொடூரம்... ஒன்றரை வயது குழந்தை சுவற்றில் மோதி, காலால் மிதித்து கொலை!

 
பிரியா
 

திருப்பூர் மாவட்டத்தில் லிவிங் டுகெதரில் வசித்து வந்த காதலர்கள் ஆரோக்கியசாமி பிரியா. இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்த நிலையில்  மார்ச் 28ம் தேதி   பிரியாவின் 16 மாத ஆண் குழந்தை தருண், வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.  பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டது.  பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் பின்னந்தலையை தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்தியும்,  முகத்தை அழுத்தியும்  கொலை செய்யப்பட்டது  தெரியவந்தது.இதன் அடிப்படையில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டது.  

குழந்தை உயிரிழப்பு
இதைத்தொடர்ந்து ஸ்டீபன் ஆரோக்கியசாமி, பிரியா ஆகியோரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, ஸ்டீபன் ஆரோக்கியசாமியின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் மல்லபுரம். பிரியாவின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் பூங்குடியாகும். இவர்கள் இருவரும் காதலர்களாக இருந்தனர். அதன்பிறகு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் இருவருக்கும் வெவ்வேறு நபர்களுடன் திருமணம் நடைபெற்றது.
பிரியாவுக்கு 1 மகன், 1 மகள் இருந்தனர். மகளை முதல் கணவருடன் விட்டு விட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து மகனோடு திருப்பூர் வந்துள்ளார். ஸ்டீபன் ஆரோக்கியசாமியும், பிரியாவும் கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். குழந்தை அடிக்கடி அழுது கொண்டு இருந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் பழைய ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள வாடகை வீட்டில் இருவரும் குடியேறினர். 
அங்கும் குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது.  கோபத்தில் ஸ்டீபன் ஆரோக்கியசாமி, குழந்தையின் தலையை பிடித்து சுவரில் அடித்தும், காலால் முகத்தில் மிதித்து அழுத்தி கொலை செய்தார்.  இதனால் குழந்தை மூச்சுத்திணறி மயங்கி இறந்தது. குழந்தை இறந்தது தெரிந்ததும் குளியலறையில் வழுக்கி விழுந்ததை போல் அக்கம் பக்கத்தினரையும் போலீசாரையும் இருவரும் சேர்ந்து நம்ப வைக்க நாடகமாடியது தெரியவந்தது.

ஆம்புலன்ஸ்

இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த வீட்டையும் போலீசார் சோதனை செய்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர். பின்னர் இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து நேற்று ஸ்டீபன் ஆரோக்கியசாமி, பிரியா ஆகியோரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web