தண்ணீர் வாளியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை பரிதாப பலி. கதறும் பெற்றோர்கள்!

 
வாளி

சென்னை திரிசூலம் லட்சுமண நகரை சேர்ந்தவர் ராஜகுரு (24). இவருக்கு திருமணமாகி காயத்திரி (20) என்ற மனைவியும், பிரணவ்ராஜ் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் லாரி டிரைவராக ராஜகுருவும், அவரது மனைவி காயத்ரி குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் ராஜகுரு குழந்தையுடன் வீட்டில் இருந்தார். நேற்று மாலை குழந்தை பிரணவ் பாதி தண்ணீர் நிரம்பிய வாளியில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென அதில் தவறி விழுந்தார். இதனால் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை உடனடியாக குழந்தையை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் காயத்ரி புகார் அளித்தார். போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web