100 கிடா, 200 மூட்டை அரிசி... ஆண்களுக்கு மட்டும் கறிவிருந்து ... களைகட்டிய கோவில் திருவிழா!

 
கறிவிருந்து

 தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த  திருவிழாவில் 100 கிடா வெட்டி, 200 மூட்டை அரிசியில் கமகமக்கும் கறி விருந்து தயாரித்து, விடிய விடிய பரிமாறப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.  அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றின் கரையோரத்தில் 1,000 ஆண்டு பழமை வாய்ந்த சடையாண்டி கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் சடையாண்டி சுவாமியை காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் செழிக்கவும், வேண்டுதல் நிறைவேறவும் சடையாண்டி சுவாமி கோயில் திருவிழா  நடந்தது.

கறிவிருந்து


இதையொட்டி நேற்று அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோயிலில் இருந்து சுவாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக சடையாண்டி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலுக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் பலியிடப்பட்டு  200 மூட்டை அரிசியில் கறி விருந்து சமைக்கப்பட்டது. நள்ளிரவில்  சிறப்பு பூஜை நடத்தப்பட்டு  அதன்பின் விழாவில் பக்தர்களுக்கு விடிய, விடிய கறிவிருந்து பரிமாறப்பட்டது. இதில், அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கறிவிருந்து

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்   போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.காவல் தெய்வமான சடையாண்டி கோயில் திருவிழா முடிந்ததும்  அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கு சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி பெரியமுத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்காக  சாமி சாட்டபட்ட 15வது நாளில் பெரிய முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெறும்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web