பரபரப்பு... தெருநாயை நடுரோட்டில் சுட்டு கொலை செய்த நபர்!
Apr 10, 2025, 14:15 IST

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மாவட்டத்தில் தெருநாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் 10க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிவிட்டது. நேற்று காலை பிரதீப் பாண்டே என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஒரு தெரு நாய் அவரை ஓட ஓட விரட்டி உள்ளது. இதனால் கோபமடைந்த பிரதீப் வீட்டிற்கு சென்று உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து வந்து நடுரோட்டில் அந்த நாயை சுட்டு கொலை செய்தார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெரு நாய் சுட்டுக்கொலை செய்த பிரதீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
From
around the
web