ஃபேமிலி டைம்.. தந்தையுடன் சில் செய்த இங்கிலாந்தின் முதல் பெண்மணி.. போட்டோஸ் வைரல்..!

 
அக்ஷதா மூர்த்தி -  நாராயண மூர்த்தி

அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மகள் ஆவார். தொழிலதிபர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பிறந்த அக்ஷதா பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்தார். கலிபோர்னியாவில் உள்ள கிளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டிலும் இருமுறை தேர்ச்சி பெற்றுள்ளார்.


பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஃபேஷன் டிசைனிங் அண்ட் மெர்ச்சண்டைசிங் நிறுவனத்தில் பேஷன் டிசைனிங்கில் பட்டம் பெற்றார். அக்ஷதா ரிஷி சுனக்கை ஸ்டான்போர்டில் சந்தித்தார், அங்கு அவர் வணிக மேலாண்மை படித்து வந்தார். ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா 2009 இல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியருக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து முதல் பெண்மணி அக்ஷதா மூர்த்தி இந்தியா வந்துள்ளார். பெங்களூருவில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார். பின்னர் தனது தந்தை இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியுடன் பெங்களூருவில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சென்றுள்ளார்.

பெங்களூர்: வேட்டி, சட்டையில் ஐஸ்கிரீம் சாப்பிடும் நாராயண மூர்த்தி.. அட  பக்கத்துல அக்ஷதா வேற..! | Infosys Narayana Murthy, daughter Akshata  enjoying ice-cream in Bengaluru ...

 ஆதர்ஷ் ஹெக்டே என்ற பயனர் இந்த படத்தை X இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில், அக்ஷதா தனது தந்தை நாராயண மூர்த்தியுடன் பெங்களூரு ஜெயநகரில் உள்ள கார்னர் ஹவுஸில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைக் காணலாம். தந்தை-மகள் இருவரும் தங்கள் கைகளில் ஐஸ்கிரீம் கோப்பைகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web