ஷாக் வீடியோ... ஓவர் வெயிட்டால் ஓட முடியாமல் ரன் அவுட் ஆன வீரர்!!

 
கரீபியன் லீக்

வெஸ்ட் இண்டீசின் பிரபல கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ், பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணி, 147 ரன்களில் சுருண்டது. அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரக்கீம் கார்ன்வால் முதல் பந்திலேயே, ஓட முடியாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.  

அவர் மிகவும் குண்டாக இருப்பதால் அவரால் சிங்கிள் ரன் கூட ஓடி எடுக்க முடியவில்லை. அவர் ஓட முடியாத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது உடல் எடையை குறைத்து ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பலரும் யோசனைகளையும், அறிவுரைகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அணியின் வெயிட்டான வீரர் என்று அழைக்கப்படும் ரக்கீம் கார்ன்வால், ஆடுகளத்திற்கு வரும்போதெல்லாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். போட்டிகளில் சொதப்பும்போதெல்லாம் ரசிகர்களின் பேசுபொருளாக ஆகி விடுகிறார். வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணியில் ஆல்-ரவுண்டராக   கார்ன்வால் தான் இருந்து வருகிறார்.  

கரீபியன் லீக்

உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக சரியான விகிதத்தில் சாப்பிட்டாலும், ஆடுகளத்தில் சமாளிக்க முடியாமல் போராடுகிறார். இது குறித்து   கார்ன்வால்   ''நான் குண்டான நபர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உடலை குறைக்க இன்னும் பயிற்சி செய்ய வேண்டும். அதுதான் எனது முக்கிய கவலை.   அதேசமயம் நான் சோம்பேறி இல்லை. உடற்தகுதிக்காக அதிக நேரம் செலவிடுகிறேன்" எனக் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சில போட்டிகளில் அற்புதமாக பந்து வீசி ரசிகர்களின் கவனம் பெற்றார். ஆனால்  நேற்றைய ஆட்டத்தில் கார்ன்வால் பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web