வானில் அபூர்வ நிகழ்வு - நாளை இரவு ஜொலிக்கப் போகும் 'சனி கிரகம்' - வெறும் கண்ணால் பார்க்கலாம்!

 
சனி

சூரியன், பூமி மற்றும் சனி கிரகம் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் 'சனி கிரகத்தின் எதிர் நிலை' (Opposition of Saturn) என்ற விண்வெளி நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. இதன் காரணமாகச் சனி கிரகம் வழக்கத்தை விட மிகவும் பிரகாசமாகவும் பெரியதாகவும் காட்சியளிக்கப் போவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சனி கிரகம்

பூமியிலிருந்து சுமார் 126 கோடி கிலோமீட்டர் தொலைவில் நடைபெறும் இந்த அபூர்வ நிகழ்வு, நாளை மாலை 5.30 மணியளவில் தொடங்குகிறது. சூரியன் மறையும் நேரத்தில் கிழக்கு வானில் உதிக்கும் சனி கிரகம், இரவு முழுவதும் ஜொலித்து மறுநாள் காலையில் மறையும்.

அதிநவீன தொலைநோக்கிகள் எதுவும் இன்றிப் பொதுமக்கள் அனைவரும் இந்த அழகிய விண்வெளி நிகழ்வைத் தங்கள் வெறும் கண்ணால் கண்டு ரசிக்கலாம் என வானியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.