அசத்தல்... நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வறை!
சென்னை மாநகராட்சியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வறை நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. சென்னை போன்ற நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற நிறுவனங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 24 மணி நேரமும் பணிபுரிய வேண்டிய சூழலில் இருந்து வருகின்றனர்.

இந்தப்பணியில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். மழை, வெயில் போன்ற சூழ்நிலையிலும் கூட அவர்கள் உணவு டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதில் 10% பேர் பெண்கள் அவர் இவர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற எந்த வசதியும் செய்து தரப்படுவதில்லை என்பது வேதனையின் உச்சம். இதனை கருத்தில் கொண்ட சென்னை மாநகராட்சி பல்வேறு இடங்களில் ஏசி ஓய்வறைகளை அமைத்துள்ளது. இந்த ஓய்வறையில் கழிப்பறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளன. மேலும் இந்த ஓய்வறையை ஒரே நேரத்தில் 25 பேர் பயன்படுத்தி கொள்ளும் வசதியும் . இந்த ஓய்வறைகள் நாளை திறக்கப்பட்டு ஊழியர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
