துயரமான பிறந்தநாள் விழா... சிக்கன் சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு!

 
மட்டன் இறைச்சி சிக்கன் மட்டன் இறைச்சி சிக்கன்

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாகப் பங்கேற்ற வாலிபர் ஒருவர், மதுபோதையில் சிக்கன் சாப்பிட்டபோது நேர்ந்த விபரீதத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சிவமொக்கா அருகே உள்ள சன்னஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சச்சின் (21) என்ற வாலிபர், தனது நண்பனின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றுள்ளார். அங்கு விருந்து முடிந்த பிறகு, தனியாக மது அருந்துவதற்காகச் சில சிக்கன் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அந்தப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்திற்குச் சென்றுள்ளார்.

க்ரில் சிக்கன்

மது அருந்திக்கொண்டே சிக்கன் சாப்பிட்ட சச்சினுக்கு, போதை தலைக்கேறிய நிலையில் ஒரு சிக்கன் எலும்பு எதிர்பாராதவிதமாகத் தொண்டையில் சிக்கியுள்ளது. எலும்பு தொண்டையை அடைத்ததால் மூச்சுவிட முடியாமல் சச்சின் கடுமையாகத் திணறியுள்ளார்.

அவர் தனிமையில் இருந்ததால், அவருக்கு முதலுதவி செய்யவோ அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ யாரும் அருகில் இல்லை. இதனால் சில நிமிடங்களிலேயே அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிக்கன் பக்கோடா

மறுநாள் காலை கட்டிட வேலைக்காக வந்த தொழிலாளர்கள், சச்சின் சடலமாகக் கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.